"எங்கிருந்தும் ஒரு ரூபாய் கூட வரவில்லை. நாங்கள் எதை சாப்பிடுவது? எப்படி வாழ்வது?", என்று மும்பையில் சிக்கிக்கொண்ட பீகாரைச் சேர்ந்த 27 வயதான புலம்பெயர் தொழிலாளி கடந்த ஏப்ரல் மாதம் என்னிடம் கேட்டார். மார்ச் 24 2020 அன்று திடீரென்று அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது இது நிகழ்ந்தது. இது இவரைப் போன்ற லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானம் இல்லாமல் தவிக்க விட்டுவிட்டது மேலும் பலர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

நான் தன்னார்வலராக பணிபுரியும் ஹெல்ப்லைனை அவர் அழைத்த போது நான் முதலில் அவருடன் பேசினேன். அவர் தனது சிரமங்களைப் பற்றி என்னிடம் கூறினார் பின்னர் இந்த படத்திற்காக நேர்காணல் செய்ய அவர் ஒப்புக் கொண்டார் ஆனால் அவரது பெயர் மற்றும் பிற விவரங்கள் தெரியப்படுத்தப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்.

நாங்கள் மே மாதத்தில் படப்பிடிப்பை துவங்கியபோது அவர் தன்னால் இயன்ற வழியில் ஊருக்குத் திரும்ப முயன்றார். புலம்பெயர் தொழிலாளர்களை ஆதரிக்க மத்திய மாநில அரசுகள் அதிகம் செய்யவில்லை என்று அவர் கோபமாக இருந்தார். நாங்கள் ரயிலுக்கான படிவங்களை நிரப்புகிறோம் எங்களிடம் இருந்த பணம் முழுவதும் காலியாகிவிட்டது என்று அவர் கூறினார். வீட்டிற்கு செல்ல பயணச்சீட்டு பெறுவது என்பது குழப்பமான மற்றும் நிச்சயமற்ற படிவ செயல் முறையைக் கையாள்வது என்பது அவர்கள் கையிலிருந்த மீதி நிதியையும் தீர்த்துவிட்டது.

காணொளியில் காண்க: மும்பையில் இருந்து பீகார் வரை, மீண்டும் மும்பைக்கே திரும்புதல்: ஒரு புலம்பெயர் தொழிலாளியின் ஊரடங்கு காலத்துக் கதை

மாற்றுவழி - தனியார் போக்குவரத்து -  ஒரு வாய்ப்பாக இல்லை. "அரசாங்கம் மக்களிடம் கட்டணம் வசூலிக்காமல் அவர்களை அவர்களது ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் உணவுக்கே பணம் இல்லாத ஒரு ஏழை எப்படி தனியார் லாரிகளுக்கு பணம் செலுத்த முடியும்?" என்று அவர் எரிச்சலுடன் கூறினார். விரைவில் மும்பையில் இருந்து சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீகாரில் உள்ள இடத்திற்கு அவரையும் அவரது நண்பர்களையும் அழைத்து செல்ல ஒரு தனியார் டாக்ஸியை அவர்கள் கண்டுபிடித்தனர்.

ஆனால் அவர் ஆகஸ்ட் மாதம் மீண்டும் மும்பைக்கே திரும்பினார். அவரது சொந்த ஊரில் அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை பணம் ஈட்டுவதற்கு அவர் இங்கே திரும்புவது அவசியமாகிறது.

2020 மே முதல் செப்டம்பர் வரையிலான இந்த நேர்காணலில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கு காலத்தில் சந்தித்த சிரமங்களை விவரித்தார். சமகால வரலாற்றில் மிக மோசமான மனிதாபிமானமற்ற நெருக்கடியின் ஒன்றான இதன் பின்னணியில் அவரை போன்ற தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை பற்றி அவர் பேசினார்: "என்னுடைய நிலையானது என்னவென்றால் என்னால் உயிர் பிழைத்திருக்க முடியுமே தவிர எனது வாழ்க்கையை வாழ முடியாது".

இந்தப் படம் தாகூர் குடும்ப அறக்கட்டளையின் ஆதரவோடு தயாரிக்கப்பட்டது.

தமிழில்: சோனியா போஸ்

Chaitra Yadavar

Chaitra Yadavar is a filmmaker and social worker based in Mumbai. She directs and produces documentaries for social-sector organisations.

Other stories by Chaitra Yadavar
Translator : Soniya Bose

Soniya Bose is a psychology and sociology graduate who loves to learn about people in their respective settings.

Other stories by Soniya Bose