தமிழகத்தில் இந்த வருடம் ஏப்ரல் 25ந்தேதியோடு முடிவடைந்த கூவாகம் திருவிழாவில், மாற்றுப்பாலினத்தவர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அழுவதற்கும், சிரிப்பதற்கும், தொழுவதற்கும், புறக்கணிப்புக்கு அப்பால் தாமாகவே வாழ்வதற்கும் அங்கு வருகிறார்கள்.
ரிதாயன் முகர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்திய மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைகள் குறித்த நீண்ட கால பணியில் அவர் இருக்கிறார்.