ஆரே ஆதிவாசிகள்: 'அதன் பின்னர் தான் நாங்கள் எங்களது இந்த நிலத்தை இழந்தோம்'
வடக்கு மும்பையில் 3,200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரே வனப் பகுதி, ஒரு காலத்தில் 27 ஆதிவாசி கிராமங்கள் இருந்த பகுதி. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல பல திட்டங்களுக்காக இந்த நிலத்தின் பெரும்பகுதி கையகப்படுத்தப்பட்டது. அவற்றுள் பால் பதப்படுத்தும் நிறுவனம் மற்றும் ஒரு திரைப்பட நகரம் ஆகியவையும் உள்ளடங்கும். சமீபத்தில் இந்த நிலத்தில் மும்பை மெட்ரோவிற்கான வாகன நிறுத்தும் இடம் அமைக்க 2,600 மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு எதிராக சட்ட போராட்டங்களும் நடைபெற்றன. இதை நடைமுறைப் படுத்துகையில் பல ஆதிவாசி குடும்பங்களின் வீடுகளும் இடிக்கப்பட்டது. அவர்களது விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது; அவர்களது வாழ்வாதாரமே அழிக்கப்பட்டிருக்கிறது. பலர் இதனை எதிர்த்து போராடினர், பேரணி நடத்தினர், மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்த வலையொலியில் கூறியிருப்பது போல : 'மெட்ரோ வேண்டும் என்று கோரி ஒரு பேரணி கூட ஒருங்கிணைக்கப் படவில்லை'