அடைபட்டு இருக்கும் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதிலேயே மணியின் முப்பது ஆண்டுகால வாழ்க்கை தொலைந்து போயிருக்கிறது. அவருடைய தொழில், சாதி குறித்த ஏளனப்பார்வைகளைச் சுமந்தபடியே இந்த வேலையை அவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் சேறும், மனித கழிவும் நிறைந்த சாக்கடைக்குள் குதிக்கிற போதும், தான் உயிரோடு திரும்புவோமா என்கிற கேள்வியோடே குதிக்கிறார் மணி.
பாஷா சிங் தற்சார்புள்ள பத்திரிகையாளர், எழுத்தாளர். மலமள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்த அவருடைய ‘Adrishya Bharat’ நூல் இந்தியில் (2012) வெளிவந்தது. அதே நூல் ‘Unseen’ என்கிற தலைப்பில் 2014-ல் ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடாக வெளிவந்தது. பாஷா சிங்கின் இதழியல் வட இந்தியாவில் விவசாய துயரங்கள், அணு உலைகளின் அரசியல், கள உண்மைகள், தலித், பாலின, சிறுபான்மை உரிமைகள் சார்ந்து செயல்படுகிறது.
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.